2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந், சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

 

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு உடுவில், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன

அந்தவகையில், வலிகாமம் தெற்கு பிரதேச சபை, உடுவில் பொதுநூலகம் ஆகியவற்றால், பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக, மேற்படி பொதுநூலகத்தின் நூலகர் ம. ஆனந்தராசா தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், அந்தவகையில், பாடசாலை மாணவர்களுக்கான வாசிப்பு, கட்டுரை, பேச்சு, சித்திரம் ஆகிய போட்டிகளும் நூலக நடமாடும் சேவை, நூற்கண்காட்சி, முன்பள்ளிச் சிறார்களுக்கான வர்ணம் தீட்டுதல், சிறுவர் கதை கூறுதல் ஆகிய போட்டிகளும் பொதுவாசகர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுவாசகர்கள், தங்கள் பெயர் விவரங்களை ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பொது நூலகம், ஒட்டுசுட்டான் பொதுநூலகம், ஒலுமடு பொதுநூலகம் ஆகியன இ​ணைந்து நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டிகள், ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதற்கமைய, புதுக்குடியிருப்பு பொது நூலகத்தில், 17ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு, புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட தரம் 1 – 5 வரையான மாணவர்களுக்கு சித்திரப்போட்டி, ஒட்டுச்சித்திரம், நுண்ணறிவும் பொது விவேகமும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

18ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு, புதுக்குடியிருப்பு பொது நூலகத்தில், தரம் 8 தொடக்கம் தரம்11 வரையான மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் என்பன நடைபெறவுள்ளன.

இதேவேளை, 19ஆம் திகதியன்று, முற்பகல் 9 மணிக்கு, ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட தரம் 1 – 5 வரையான பாடசாலை மாணவர்களுக்கு சித்திரப் போட்டி, ஒட்டுச் சித்திரம், நுண்ணறிவும் பொது விவேகமும் நடைபெறும்.

மேலும், 18ஆம் திகதியன்று, மாங்குளம் மகாவித்தியாலத்தில் தரம் 8 தொடக்கம் தரம்11 வரையான மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என்பன நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .