2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வாள் வெட்டுக்கு இலக்கானவர் கொழும்புக்கு மாற்றம்

Editorial   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ் தில்லைநாதன் 

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திக்கம், அல்வாய் வடமேற்கு பகுதியில் சனிக்கிழமை (23) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைலாசபிள்ளை அன்ரன் இராசநாயகம் (வயது 44) எனும் இளம் குடும்பஸ்தரே வாள் வெட்டுக்கு  இலக்காகியுள்ளார். 

தன்னை ஒருவர் இரண்டு தினங்களாக  பின்தொடர்ந்து வந்தவர், சனிக்கிழமையும் பின்தொடர்ந்துள்ளார். அதனை அவதானித்ததன் பின்னர், தன்னை பின்தொடர்வதற்கான காரணத்தை கேட்டுள்ளார்.   அதன்போதே, பின்தொடர்ந்து வந்தவர், தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து, சரமாரியாக வெட்டியுள்ளார்.

  இரண்டு கை பகுதியிலும் பலத்த காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படுள்ளார்.

சந்தேக நபரை அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பருத்தித்துறை  பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X