Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கோண்டாவில் - உப்புமடச் சந்தியில், செப்டெம்பர் 6ஆம் திகதியன்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் - உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள இரும்பகத்தின் உரிமையாளரான கந்தையா கேதீஸ்வரன் (வயது 47) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவாராவார்.
எனினும் சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களுக்கு மேலாகியும், கோப்பாய் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சம்பவ தினத்தன்று, கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் எனினும், உரிமையாளரைத் தாக்கிய கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்ததாகவும், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர் உயிரிழந்தவுடன், தற்போது, உறவினர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், உறவினர்கள் மேலும் கூறினர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .