Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 மார்ச் 01 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட கைது செய்யப்பட்ட 5 பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை (21) இரவு புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது.
3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டின் படலையில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அங்கு யன்னல் கண்ணாடிகள் உள்பட பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
அந்தக் கும்பல் தப்பித்தவேளையில் வீதியில் விபத்து ஒன்றும் இடம்பெற்றது. அதிலிருந்து 8 பேரும் தப்பி ஓடினர்.
ஒருவாரமாக சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனர். அதனடிப்படையில் வலி. தெற்கு பிரதேச சபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர் அன்ரன் லீனஸ் உட்பட 5 பேர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் 5 பேரும் உடுவில் மல்வத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் நேற்று (28) மாலை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பதை முன்வைத்தார். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சட்டத்தரணி மன்றுரைத்தார்.
வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி, விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள்கள் ஐவரையும் பிணையில் விடுவித்தார்.
இதேவேளை, உடுவில் அம்பலவாணர் வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளுக்கும் சந்தேகநபர்கள் ஆறு பேருக்கும் தொடர்புள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
18 minute ago
25 minute ago