Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
விஜயதசமிப் பெருவிழாவை முன்னிட்டு, யாழ். குடாநாட்டிலுள்ள இந்து கோவில்களில் விசேட பூசை வழிபாடுகளும் அம்பாள் உள்ளிட்ட கோவில்களில் மஹிஷாசுர சங்காரத்தைக் குறிக்கும் வகையிலான வன்னி வாழை வெட்டல் நிகழ்வும் நடைபெற்றது.
அத்துடன், பாடசாலைகள், கல்வி நிலையங்கள், தொழில் ஸ்தாபனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பல்வேறு பாடசாலைகளிலும் விஜயதசமியையொட்டிச் சிறப்புக் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன், நேற்றைய தினம், யாழின் பல்வேறு பகுதிகளிலும் ஏடு தொடக்கல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தில் நேற்று முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை இடம்பெற்ற ஏடு தொடக்கல் நிகழ்வுகளில், சுமார் நூறு வரையான சிறுவர், சிறுமிகளுக்கு ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.
மேற்படி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கலந்துகொண்டு சம்பிராதயபூர்வமாக ஏடு தொடக்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago