2025 மே 14, புதன்கிழமை

’விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள்’

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுவிக்கப்பட்ட காணிகளை, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென்பதை, பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு, வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் பணிப்புரைவிடுத்தார்.

ஆளுநர் செயலகத்தில், இன்று, பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, வீட்டுத்திட்டம், வீடமைப்பு என்பவற்றின் உண்மை நிலவரங்களை பிரதேச செயலாளர்களிடம் தனித்தனியாக ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

இதன் பின்னர் கருத்துரைத்த போதே, ஆளுநர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .