Editorial / 2018 மார்ச் 25 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
சாவகச்சேரி - புளியடி பகுதியில், நேற்று (24) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேற்படி வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார், அவ்வீதி வழியாகப் பணித்த காரொன்றை மறித்துச் சோதனை செய்துள்ளனர். இதன்போது, காருக்குப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், காரை முந்திச் செல்ல முற்பட்டபோது, பின்னால் வந்த இராணுவ பஸ், மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற கொடிகாமத்தைச் சேர்ந்த சிவயோகலிங்கம் மயூரன் (வயது 27) என்ற இளைஞர், ஸ்தலத்திலேயே பலியானார்.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள், இளைஞனின் மரணத்துக்கு பொலிஸாரே காரணமென்று கூறி, பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பின்னர், பொதுமக்களுடன் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இராணுவ பஸ் மற்றும் காரை, பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ள பொலிஸார், இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
37 minute ago