2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (08)  காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் இயக்கச்சியைச் சேர்ந்த க.செந்தமிழ் (வயது-22) என்பவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X