Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜூன் 13 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன், வி.விஜயவாசகன், கி.பகவான்
மீசாலை - புத்தூர் பிரதான வீதியில், கனகம்புளியடி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், அதிகாலையில் வீதியை கடக்க முற்பட்ட போது வாகனம் அவரை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள பால் சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் சரசாலை வடக்கைச் சேர்ந்த வி.சிவசுந்தரம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோதி விட்டு தப்பிச்சென்ற வாகனம் தொடர்பில் தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும் குறித்த வாகனம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறியத்தருமாறும் சாவகச்சேரி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி சந்திரசேகரன் விசாரணைகளை மேற்கொண்டார்.
10 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
3 hours ago