2025 மே 03, சனிக்கிழமை

வீடற்ற குடும்பங்களுக்கு அரிய வாய்ப்பு

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

நகர் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற குடும்பங்களுக்கு, நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப் பவடிவங்களை யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டச் செயலகங்களிலும், யாழ்ப்பாணம், நல்லூர், வடமராட்சி வடக்கு, கரைச்சி, வவுனியா ஆகிய பிரதேச செயலகங்களிலும் உதவி உள்ளராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், நகர அபிவிருத்தி அதிகார சபை, வடமாகாண அலுவலகம், இல: 134, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X