2025 மே 05, திங்கட்கிழமை

வீடு புகுந்து அதிகாலையில் கொள்ளை

Niroshini   / 2021 ஜூன் 03 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று. வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு. கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

இச்சம்பவம், யாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடை பகுதியில், இன்று (03) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து, சுன்னாகம் பொலிஸாரால், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முகங்களை மறைத்தவாறு முகமூடிகள் அணிந்த வண்ணம் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் முன் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் உட்புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களைத் தாக்கி, அங்கிருந்த பெண்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X