Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2019 மார்ச் 14 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் கோடரிகளுடன் வந்த இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்து, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (13) இரவு 11 மணியளவில் முகங்களை துணிகளால் மூடி கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல், வாள்கள், கை கோடாரிகளுடன் வீட்டினுள் புகுந்து வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. பின்னர் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கியது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் அங்கு விரைந்த போது, தாக்குதலாளிகள் வீட்டில் இருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.
அவர்களை பொலிஸார் துரத்திச் சென்ற போது, சங்குவேலி பகுதியில் தமது 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள் ஒன்றினையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 17 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
52 minute ago
17 May 2025