2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் கஞ்சா செடி; வெளிநாட்டு பிரஜை கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 29 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட மானிப்பாய் - கைதடி பிரதான வீதியின் உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், பிரித்தானி பிரஜா உரிமை கொண்டவர் எனவும் இவர் பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வீட்டில் சாடி ஒன்றுக்குள் 03 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X