Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் வாகனம் முழுமையாக எரிந்து நாசமாகியது.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (11) மாலை 3 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“6 பேரில் இருவர் வீட்டுக்கு வெளியே நின்றனர். 4 பேர் வீட்டு வளவுக்குள் புகுந்தனர். வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்துக்குச் சென்று பெற்றோல் குண்டை எறிந்தனர். வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்த வீட்டுக்கு முன்னரும் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .