2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வீதிகளில் கழிவுகளை வீசியவர்களுக்கு தண்டம்

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதிகளில் கழிவுகளை வீசியவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் கழிவுகள் வீசப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

அது தொடர்பில் மாநகர சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கி வந்துள்ளனர். அதனால் கடந்த மாதம் இறுதிவார பகுதியில் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் இரவு வேளைகளில் விசேட வீதி சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீதிகளில் கழிவுகளை வீசி செல்பவர்களை மடக்கி பிடித்தனர்.

அது தொடர்பில் ஆணையாளரிடம் கேட்டபோது,

வீதிகளில் கழிவுகளை வீசிய குற்றச்சாட்டில் டிசம்பர் மாத இறுதி வார பகுதியில் 29 பேரை மாநகர சபை ஊழியர்கள் பிடித்தனர். அவர்களில் 26 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதித்தோம். ஏனைய மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

அதேவேளை யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் கழிவுகள் வீசப்படும் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X