2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வீதியில் சண்டையிட்ட இருவருக்கு பிணை

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியில் நின்று தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்ட குடும்பத்தலைவர் ஒருவரும் பெண்ணொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நல்லூர் கிட்டுப்பூங்காவுக்கு அண்மையாக பிரதான வீதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (26)  இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வீதியில் நின்று இருவரும் தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்டுள்ளனர். சம்பவத்தையடுத்து இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர். அதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை (27)  முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இருவரையும் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்தார். அத்துடன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .