2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 14 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று (14) உயிரிழந்துள்ளார்.

பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .