Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.
2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமைப்போன்று யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, கடந்த வாரம் புரெவி புயலால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பிய நிலையில், மீளவும் நலன்புரி நிலையங்களுக்குத் திரும்புவதாகம் அதிகாரிகள் கூறினர்.
இதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் பெய்து வரும் கனத்த மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
கனகாம்பிகை குளத்தால் அதிக நீர் வெளியாகிறது. இதனால் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, உரையால் புரம் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
20 minute ago
21 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
1 hours ago
5 hours ago