Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நிதர்ஷன் விநோத், எம்.றொசாந்த்
யாழ். வேம்படி பகுதியில் உள்ள உயர் தரப் பாடசாலையொன்றின் அதிபருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒருவரின் பெயர் குறிப்பிட்டு குறித்த அநாமதேயக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கடமை புரிந்த அதிபரின் பெயருக்கு விலாசமிடப்பட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் அண்மையில் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது புதிய அதிபர் ஒருவரே கடமையில் இருக்கின்றார்.
இந்த நிலையில், முன்னாள் அதிபர் குறித்த கடிதத்தை பிரித்து படித்தபோது, அவரது பெயரை குறிப்பிட்டு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து, யாழ். பொலிஸ் நிலையத்துக்கு கடிதத்துடன் சென்ற முன்னாள் அதிபர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago