2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஸ்தலத்திலேயே சிறுவன் பலி்; சாரதிக்கு விளக்கமறியல்

George   / 2017 மே 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை பாலக்காடு சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது. வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி சென்ற தனியார் பஸ், சைக்கிளில் சென்ற சிறுவனை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

ஊர்காவற்றுறை, நெருஞ்சிமுனை பகுதியைச்சேர்ந்த ஜெயகுமார் அகிலன் என்ற சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, அப்பகுதியில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் பஸ்ஸை அடித்து நெருக்கினர். இதன்போது சாரதி தப்பியோடி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதேவேளை, சாரதியை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X