2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹெரோய்ன் கடத்திய விவகாரம்: 6 இந்தியர்களுக்கும் 96 மணிநேரம் தடுப்பு

Gavitha   / 2017 ஏப்ரல் 03 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 13.5 கிலோ கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தைதான இந்தியப்பிரஜைகள் அறுவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுவதற்கு உரிய அனுமதியினை மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் காங்கேசன்துறை பொலிஸாருக்கு, திங்கட்கிழமை (03) வழங்கியுள்ளார். பருத்தித்துறைக்கு வடமேற்கே ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை வந்து கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றினை கடற்படையினர் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் போது எரிபொருள் சேமித்து வைக்கும் எண்ணெ;னை கான் ஒன்றிற்குள் மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து கடத்தி வரப்பட்டிருந்த 13.5 கிலோ கிராம் ஹெரோயின் கைபெற்றப்பட்டது. 

அத்துடன் படகில் இருந்த நபர்கள் ஆறு பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். கடற்படையினரால் கைதான இந்தியர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டிருந்தது.  

இந் நிலையில் சந்தேக நபர்களை 96மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குரிய கட்டளையினை பொலிஸார் நீதிமன்றில் கோரியிருந்தனர். வழக்கினை விசாரணை செய்த நீதிவான் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்குரிய அனுமதியினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .