2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இளவாலை, சேத்தாங்குளம் பகுதியில் 104 கிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்களை வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல.டி.சில்வா தெரிவித்தார்.

கம்பஹா மற்றும் சேத்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் தொடர்பில் ஒரு வாரத்துக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புடைய மேலதிக சந்தேகநபர்களை கைது செய்தவதற்காக, கம்பஹா பகுதிக்கு மேலதிக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X