2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் சிறைக்குச் சென்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற நபரை, திங்கட்கிழமை (11) சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்து, தங்களிடம் ஒப்படைத்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய அருமைநாயகம் அருள்யூட் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், இவரிடமிருந்து 120 மில்லிகிராம் ஹெரோய்ன்  கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறையிலுள்ள இவரது மச்சானைப் பார்ப்பதற்காகச் சென்ற போதே, இவர் ஹெரோய்னுடன் சென்றுள்ளார். 

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X