Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 23 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் நேற்று (22) தீர்ப்பளித்தார்
“நால்வரும் தம்மீதான குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் குற்றவாளிகள் நால்வருக்கும் 3 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. நால்வரும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப் பணத்தைச் செலுத்த வேண்டும்.
நால்வரும் இள வயதினர்களாக உள்ளனர். அவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பப் பின்னணி என்பவற்றை மன்று கவனத்தில் எடுக்கிறது. அதனால் நால்வருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட 10 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் மீளவும் குற்றச்செயலில் ஈடுபட்டால் 3 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று நீதிவான் தீர்ப்பளித்தார்.
38 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago