2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு போதைபொருள் உட்கொண்ட நிலையில் சென்ற 35 பேர் கைது

Kogilavani   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் ஒயாமடுவையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வளாகத்தினுள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் சென்ற 35 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
     
கண்காட்சிகூட வளாகத்தினுள் போதையில் செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் 35 பேரும் மதுபானம், கஞ்சா, அபின் உட்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்ட நிலையில்  சென்றபோது, கண்காட்சி வளாகத்தினுள் இயங்கிவரும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டு ஒயாமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் இவர்கள் 35 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஒயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 10 February 2012 08:08 PM

    போதை ஒழிப்புப் பிரிவு கொடியேற்றம் போன்ற சமய நிகழ்சிகளுக்கும் வர வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X