Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 24 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு நொச்சியாகம பிரதேசத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 53 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் அல்லது அங்கவீனமுற்றுள்ள அரச அதிகாரிகளுக்காகவே இவ்வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டுக் கூரை வரை தாமாகவே வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு அதன் பின்னரான வேலைகளுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மூன்று இலட்சம் ரூபா நிதி கடனடிப்படையில் வழங்கப்படவுள்ளது. இவ்வீடமைப்புத் திட்டத்திற்காக அரசாங்கம் 15.9 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
33 minute ago