2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பலகையினால் தாக்கி நபரொருவரை கொலை செய்தவருக்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

Super User   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

பலகையினால் தாக்கி நபரொருவரை கொலை செய்தமையும் மற்றுமொரு நபரை தாக்கி பலத்த காயங்களுக்குள்ளாக்கிய சந்தேகநபருக்கு ஏப்ரல் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு அநுராதபுரம் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறந்து சில நிமிடங்களிலேயே இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குறித்த சண்டையினை விலக்கச் சென்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .