2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் உயிரிழந்த கான்ஸ்டபிள் பண்டாரவின் குடும்பத்துக்கு ரூ.350,000 உதவித்தொகை கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 16 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர)

 
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி புத்தளத்தில் நடைப்பெற்ற அசம்பாவிதத்தின் போது மரணமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நவரத்ன பண்டாரவின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இன்று வழங்கப்பட்டது.

புத்தளம் பெரியபள்ளி நிர்வாக சபை, புத்தளம் வர்த்தக சங்கம், புத்தளம் நகர சபை, புத்தளம் ஜம்மியத்துல் உலமா சபை என்பன இணைந்து புத்தளம் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியிலிருந்து உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நவரத்ன பண்டார அவர்களின் மனைவியிடம் இவ் உதவித்தொகை வழங்கப்பட்டது.

குறித்த சம்பவம் நடைப்பெற்ற போது மோட்டார் சைக்கிள் சேதற்திற்குள்ளாகிய 2 பொலிஸ் காண்ஸ்டபிள்களுக்கும் தலா 75,000 ரூபா வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்ணான்டோ, புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்ன, வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.நவவி, மதத்தலைவர்கள,; பொலிஸ் நிலைய உயரதிகாரிகள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X