2025 மே 24, சனிக்கிழமை

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது; 9 மாணவியருக்கு வைத்திய பரிசோதனை

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

தனது பாடசாலையில் கல்வி கற்கும் எட்டு முதல் 13 வயது வரையான மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், இன்று வியாழக்கிழமை மாலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரிவிற்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி அதிபரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 9 மாணவிகளும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரிவிற்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான அதிபர், பாடசாலை முடிவடைந்த பிறகு பல்வேறு கல்வி நடவடிக்கைகளை காரணம் காட்டி மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து வந்துள்ளமை தொடர்பாக கிடைக்கப் பெற்ற சாட்சிகளின் அடிப்படையில், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • RR Saturday, 30 June 2012 12:18 AM

    கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே இவ்வறான செயல்களை தடுக்கலாம்.

    Reply : 0       0

    brightfull Saturday, 30 June 2012 07:33 AM

    ஒழுக்கக்கல்வி கற்பிக்க வந்தவர் ஏனப்பா இப்படி நடந்து கொண்டார்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X