2025 மே 22, வியாழக்கிழமை

வெள்ளப் பெருக்கு காரணமாக 1657 குடும்பங்கள் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்                      

அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரையில் 1657 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் அங்குமடு பகுதியைச் சேர்ந்த 72 குடும்பங்களும் பண்டுகளகம பகுதியைச் சேர்ந்த 49 குடும்பங்களும் சிராவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த 70 குடும்பங்களும் நாகவிகாரையைச் சேர்ந்த 53 குடும்பங்களும கலத்தேவ பகுதியைச் சேர்ந்த 60 குடும்பங்களும், கல்குளம் பகுதியைச் சேர்ந்த 34 குடும்பங்களும் சாராணந்த பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களும் ஹொரவப்பொத்தானை பகுதியில் 500 குடும்பங்களும் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியிலுள்ள 619 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் இம்மக்களைப் பார்வையிட்டு வருவதோடு அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X