2025 மே 23, வெள்ளிக்கிழமை

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு; 30ஆம் திகதிக்குமுன் விண்ணப்பங்களை அனுப்ப உத்தரவு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகளும் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை இம்மாதம் 30ந் திகதிக்கு முன்பதாக சம்பந்தப்பட்ட கமநல சேவைகள் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என கமநல சேவைகள் மற்றும் வனஜீவிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

வறட்சியினால் அநுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபோகத்தின்போது பயிரிடப்பட்ட நெல் மற்றும் மேலதிகப் பயிர்ச் செய்கைகள் வறட்சியினால் அழிந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முழுமையான, அரைவாசி, சாதாரண அடிப்படையில் நஷ்டஈட்டினை வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதோடு இதற்கான விண்ணப்பப் படிவங்களை கமநல சேவைகள் நிலையங்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X