2025 மே 26, திங்கட்கிழமை

பொலிஸ் சோதனை சாவடியை சேதப்படுத்திய 36 பேருக்கு அபராதம்

Super User   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம்,  கெபிதிகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாஹல்கட பகுதியிலுள்ள பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் நடாத்தி பெருமளவு உடமைகளுக்கு சேதங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இரு இராணுவ வீரர்கள் மற்றும் ஐந்து சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உட்பட 36 பேருக்கும் 61 இலட்சத்து இருபதாயிரம் ரூபா அபராதத்தினை வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று புதன்கிழமை விதித்து தீர்ப்பளித்தார்.

2004.03.10ம்  திகதி குறித்த சோதனை சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் ஒருவரை பலாத்காரமாக மீட்டெடுக்க முற்பட்டபோதே சோதனைச் சாவடி  நிர்மூலமாக்கப்பட்டதுடன் பெருமளவு பொருட் சேதங்களும் ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 36 பேருக்கும் தலா 170, 000 ரூபா வீதம் 6,120,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஆபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X