Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 27 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
கருவெலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலுத்கம நகரில் தாய் சேய் சிகிச்சை மற்றும் பிரசவ விடுதியினை கிராமிய வைத்தியசாலையாக மாற்றும் நோக்கில் அமைக்கப்பட்ட வார்ட் தொகுதியொன்று 5 வருடங்களாகியும் இது வரை திறக்கப்படாமையினால் மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
இது தொடர்பில் கருவெலகஸ்வௌ பிரதேச சபையின் உப தலைவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த கட்டிடம் மக்களினால் சேகரித்த பெரும் தொகை பணத்தினாலும், மாகாண சபை மூலம் வழங்கப்பட்ட 20 இலடசம் ரூபா வரையிலான நிதி ஒதுக்கீடு மூலமும் கட்டப்பட்டது.
இவ் சிகிச்சை நிலையத்தினை கிராமிய வைத்தியசாலையாக மாற்றுமாறு கோரிக்கை விடுத்தப்போது வார்ட் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டால் இச் சிகிச்சை நிலையத்தினை கிராமிய வைத்தியசாலையாக மாற்றி தருவதாக உறுதியளித்ததினையடுத்து இப் பகுதி மக்களின் முயற்சியினால் இவ் வார்ட் தொகுதி அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
குறித்த சிகிச்சை நிலையம் தொடர்பில் தான் வடமேல் மாகாண சபை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், அதன் பின்னும் வார்ட் தொகுதி திறக்கப்படவில்லையாயின் ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், அமைச்சருமாகிய பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார்.
drs Saturday, 28 January 2012 04:07 AM
கட்டினால் மட்டும் போதாது தம்பி....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
58 minute ago
1 hours ago