2025 மே 26, திங்கட்கிழமை

பொலிஸாரை தாக்கிய 16 பேருக்கு 642,000 ரூபா தண்டம்

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏம்.ரி.ஆகில் அஹமட்)                                                                                                                                   

சட்டவிரோத சாராய உற்பத்தியாளர்களை கைது செய்ய சென்ற பொலிஸாரை தாக்கிய 16 பேருக்கு வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தரவினால் இன்று வெள்ளிக்கிழமை தலா 40,000 ரூபா வீதம் ஆறு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா தணடம் விதித்து தீர்ப்பளித்தார்.

இவர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்த எட்டு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதையடுத்தே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 16 பேருக்கும் தலா எட்டு மாத கால கடூழிய சிறை தண்டணை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X