2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் வைத்திருந்த 17 வயது இளைஞர்கள் இருவர் கைது

Super User   / 2012 மே 07 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

சுமார் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 17 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பேரில் அநுராதபுரம் புதிய நகர பகுதியில் வைத்து இவ்விரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாறு வேடமணிந்து சென்ற பொலிஸாராலேயே போதைப்பொருளுடன் குறித்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு இளைஞரிடம் 20 கிராம் 530 மில்லி கிராமும் மற்றையவரிடம் 840 மில்லி கிராமும் ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் 20 கிராம் ஹெரோயினை வைத்திருந்தவரின் தாயார் இவ்விரு இளைஞர்களையும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த பெண் இப்பகுதியை விட்டு தலைமறைவாகியுள்ளார். இவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாக   அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .