2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 300 குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை மீள்குடியேற்றப்படவுள்ளனர்

Super User   / 2011 ஜனவரி 04 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் பிரதேசத்தில் வசித்துவரும் 300 குடும்பங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

யாழ் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைப்பின் செயலாளர் அய்யுப் அஸ்மின் தெரிவித்தார்.

புத்தளத்திலிருந்து இரவு 9 மணிக்கு சுமார் ஏழு பஸ் வண்டிகளில் இம்மக்கள் யாழ்ப்பாணத்துக்கு சென்று தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைப்பின் செயலாளர் மேலும் கூறினார்.

யாழில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 11ஆம்; திகதி செவ்வாய்க்கிழமை காலை முதல் யாழ் ஒஸ்மானிய்யா கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இம்மக்கள் தமது பதிவுகளை இங்கு மேற்கொள்ள முடியும் எனவும் செயலாளர் கூறினார்.

இதேவேளை, கடந்த மாதம் புத்தளத்திலிருந்து 100 குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .