2025 மே 26, திங்கட்கிழமை

புத்தளத்திற்கு கொண்டுவரப்பட்ட 65 செம்மறி ஆடுகள் பொலிஸாரால் மீட்பு

Super User   / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

 

 

நொச்சியாகம பிரதேசத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்பட்ட 65 செம்மறி ஆடுகளும் 15 ஆடுகளும் புத்தளம் - அனுராதபுர வீதியிலுள்ள இராணுவ முகாமிற்கு அருகில் வைத்து புத்தளம் பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மிருகங்கள் அனுமதி பத்திரமின்றியும் அளவுக்கு அதிகமாகவும் கொண்டு வரப்பட்டமையினாலேயே பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த லொறி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன் லொறி சாரதி உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X