2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றில் வீழ்ந்த தங்கையை காப்பாற்றிய 13 வயது சிறுவன்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ்)


பாதுகாப்பற்ற 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி வீழ்ந்த தனது சகோதரியை,  13 வயது சிறுவன் ஒருவன்  பாதுகாத்து தானும் பாதுகாப்பாக வெளியேறிய சம்பவம் சிலாபம் அத்துவன கிராமத்தில் சிங்கள, தமிழ் புதுவருடத்தன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிலாபம் அத்துவன கிராமத்தைச் சேர்ந்த  அஜித் புஷ்பகுமார (வயது 42), தயானி அமரசேன ஆகியோரின் மூத்த புதல்வனான 13 வயதுடைய நிபுன் தனஞ்சய என்ற சிறுவன் சிலாபம் மஹகம மகாவித்தியாலயத்தில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கின்றான்.  இச்சிறுவனின் தந்தை அஜித் புஸ்பகுமார தனியார் பஸ் ஒன்றில் கடமையாற்றுகின்றார். இக்குடும்பத்தில்  3  பிள்ளைகள். மூத்த புதல்வனான நிபுன் தனஞ்சய தவிர  ஏனைய இருவரும் பெண் பிள்ளைகள். அவர்களுள் ஒருவரே கிணற்றில் வீழ்ந்த 9 வயதுடைய  அச்சிணி தனஞ்சய  என்ற சிறுமி.

கடந்த புத்தாண்டு தினத்தன்று இப்பிள்ளைகளின் தந்தை கடைக்குப்  பொருட்கள் வாங்கச் சென்றிருந்த அதேவேளை, தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தார்.  இவ்வேளையில் இவரது சகோதரியான  அச்சினி என்ற சிறுமி வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது தவறி கிணற்றினுள் வீழ்ந்துள்ளார். இதனைக் கண்ட இச்சிறுமியின் சகோதரனான 13 வயதுச் சிறுவன் கிணற்றில் இறங்கி அச்சிறுமியைக் காப்பாற்றியுள்ளதுடன், தானும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளான்.  

'குளித்துக்கொண்டிருந்த தனது சகோதரி கிணற்றில் வீழ்வதை தான் அவதானித்ததாகவும் தனது சகோதரியைக் காப்பாற்றும் நோக்கில் கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி சகோதரியைக் காப்பாற்றினேன்.

தனது தங்கை கிணற்றில் வீழ்ந்ததைக் கண்டவுடன் தங்கை கிணற்றில் வீழ்ந்து விட்டாள் என சத்தமிட்டேன். தங்கையைக் காப்பாற்றுவதற்காக கயிற்றை எடுத்து மரம் ஒன்றில் கட்விட்டு அக்கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி, கயிற்றைப் பற்றியவாறு தங்கையின் கையை பிடித்துக்கொண்டேன். இவ்வேளையில் எனது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களின் உதவியுடன் தங்கையை காப்பாற்றினேன்' என  கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்றிய சகோதரனான 13 வயது சிறுவன் தெரிவித்துள்ளான்.


You May Also Like

  Comments - 0

  • riswan Tuesday, 17 April 2012 10:16 PM

    பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    Rifat Riswan Wednesday, 18 April 2012 09:59 PM

    பாராட்டுக்கள், இதுதான் இரத்த பாசம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X