2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புத்தளத்தில் 15,000 கண்டல் தாவரங்களை நடும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்,ஜுட் சமந்த)


சூழலை பாதுகாக்கும்  திட்டத்தின் கீழ், வடமேல் மாகாண  கடற்றொழில் அமைச்சினால் புத்தளத்தில் 15,000  கண்டல் தாவரங்களை நடும் நிகழ்ச்சித் திட்டம் புத்தளம் பாலாவி கடற்கரை பிரதேசத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, மின்சாரம்,  வீடமைப்பு மற்றும் நிர்மாணம், கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் தலைமையில் புத்தளம் பாலாவி சிங்கள மகா வித்தியாலயத்தில் இதற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவுடன்  பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரும் கண்டல் தாவரம் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .