Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
வாகனமொன்றை அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படட 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான ருவந்திக்கா மாறப்பன முன்னிலையில் நேற்று புதன்கிழமை இச்சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
கலன்பிந்துனுவெவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மாவத்தவெவ, மைலகஸ்வெவ கிராமத்தில் அமைக்கப்படவுள்ள பொதுக்கிணறொன்று தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே முரண்பாடு தோன்றியதாகவும் இதன் காரணமாகவே வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் அடித்துநொறுக்கப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் உரிமையாளர் எம்.சிரியலதா செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மைலகஸ்வெவ கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்களான 20 பேரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago