2025 மே 22, வியாழக்கிழமை

மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததால் 2056 பேர் இடப்பெயர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

மல்வத்து ஓயா பெருக்கெடுத்தமையினால் அநுராதபுரம் மல்வத்து ஓயாவிற்கு அருகில் வசித்த 619 குடும்பங்களைச் சேர்ந்த 2056 பேர் நேற்று வெள்ளிக்கிழமை வரை இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மத்திய நுவரகம் பிரதேச செயலாளர் ஜீ. ஏ. கித்சிரி தெரிவித்தார்.

மல்வத்து ஓயாவை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்கள் அடிக்கடி வெள்ளப் பெருக்கினால் பாதிக்கபடுகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு
வருகின்றது என்றார்.

இதேவேளை மாவட்டத்தில் பெய்த மழையினால் மாவட்டத்திலுள்ள 11 பெரிய குளங்களில் 9 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நாச்சியாதீவு குளத்தின் 6 வான் கதவுகளும், பதவிய குளத்தின் 1 வான் கதவும், வாஹல்கட குளத்தின் 3 வான் கதவுகளும், நுவரவாவியின் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X