Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்,இர்ஷாத் ரஹூமத்துல்லாஹ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
புத்தளம், முந்தல் பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மூன்றரை வயதுச் சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக குறித்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மரணச் சடங்கொன்றுக்கு செல்லவேண்டியிருப்பதால் சிறுமியை அழைத்து வருமாறு அவரது தாய் கூறி அனுப்பியதாக குறித்த சிறுமியின் மாமா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவராலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சரத்சந்திரன் ஸ்வஸ்திகா என்ற இச்சிறுமியின் தந்தை இத்தாலியில் கடமையாற்றுவதாகவும் குறித்த சிறுமி முச்சக்கர வண்டியொன்றிலேயே தினமும் பாடசாலைக்கு சென்று வருவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிறுமியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் முந்தல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 May 2025
24 May 2025
24 May 2025