2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போலி இலக்கத்தகடுகளுடன் விற்பனைக்கு தயாராகவிருந்த 4 மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜூட் சமந்த,அப்துல்லாஹ்,எஸ்.எம்.மும்தாஜ்)

திருடப்பட்டு அவற்றுக்கு போலியான இலக்கத் தகடுகளைப் பொருத்தி விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபரொருவர் ஆராய்ச்சிக்கட்டு வீதிச் சோதனைச் சாவடி பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆராய்ச்சிக்கட்டு நகரில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை பொலிஸார் நிறுத்தி; சோதனையிட்டபோது, இம்மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு போலியானதென்று தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சிக்கட்டு வீதிச் சோதனைச் சாவடி பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து இம்மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரை பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது  ஆராய்ச்சிக்கட்டு,  வெலிபெலஸ்ஸ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  இம்மோட்டார் சைக்கிள்கள் நீர்கொழும்பு, ஆண்டிகம அவிஸ்ஸாவளை, கொஸ்கம ஆகிய பிரதேசங்களில் திருடப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஆராய்ச்சிக்கட்டு பொலிஸ் சோதனைச் சாவடியின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பத்திரண தலைமையிலான குழுவினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .