2025 மே 26, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் 450 ஏக்கரில் மரமுந்திரிகை உற்பத்தி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                     

அநுராதபுரம் மாவட்டத்தில் 450 ஏக்கரில் மரமுந்திரிகை உற்பத்தி செய்கை திட்டத்தை மேற்கொள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதற்காக மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக 474 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

36,000 மரமுந்திரிகைக்கன்றுகள் நாட்டுவதற்கு தேவைப்படுவதாகவும் இதனை மிகிந்தலை மத்திய மரமுந்திரிகை கன்றுகள் உற்பத்தி செய்யும் இடத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 136,398 மரமுந்திரிகை கன்றுகளை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X