2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முந்தலில் 5 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு ஏற்பாடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பிரதேச பிரிவில் 5 காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.

முந்தல், உடப்பு, சின்னப்பாடு மற்றும் முக்குதொடுவா பகுதிகளிலேயே இந்த மின் நிலையங்கள்  அமைப்பதற்கான இடங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2011ஆம் ஆண்டு முடிவில் தேசிய மின்சாரத்துக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் வகையில் இப்பணிகள் துரிதகதியில் இடம்பெறவுள்ளன.

தலா ஒவ்வொரு  காற்றாலை மின்சார நிலையத்துக்கும் தலா 2,300 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமொன்றே இதனை செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .