Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 26 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் தேசத்துக்கு மகுடம் மற்றும் தேசிய சுதந்திர தினம் போன்றவற்றினை முன்னிட்டு அநுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள ஐம்பது பாடசாலைகள் நாளை 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 22ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அநுராதபுரம் வலய கல்விப் பணிப்பாளர் அபேரத்ன அறிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தினத்தின் போதும் தேசத்துக்கு மகுடம் நிகழ்வின் போதும் நடைபெறவிருக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றவென நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளிலிருந்து வருகைதரவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் தங்கியிருப்பதற்கென அநுராதபுரம் நகரப்புறத்தலுள்ள ஐந்து பிரதான பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
ஏனைய பாடசாலைகள் பாதுகாப்புக்காக இப்பகுதிக்கு வரும் பொலிஸாரும் இராணுவத்தினரும் தங்குவதற்கென ஒதுக்கப்பட்டுள்ளன என்று வலய கல்விப் பணிப்பாளர் மேலும் கூறினார்.
MADURANKULI KURANKAAR Friday, 27 January 2012 01:54 AM
எப்படியோ மாணவர்களின் கல்வி கெடாமல் இருந்தால் சரிங்கோவ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago