2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பஸ் தரிப்பிடத்தில் வெற்றிலை எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 02 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பஸ் நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை எச்சில் துப்பினால் 500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் பயணிகள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளதாக புத்தளம் நகரசபை அறிவித்துள்ளது.

சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்போம் என்ற கருப்பொருளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் புத்தளம் நகர சபையின் அதிரடி நடவடிக்கையில் ஒன்றாகவே இது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கண்ட இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பி சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தியவர்கள் தற்போது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். 10 ரூபா வெற்றிலைக்கு அபராதத் தொகையாக 500ரூபாவை கொடுக்க வேண்டுமா? என்று நகரசபை கேட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • riyas Friday, 02 March 2012 08:59 PM

    வெறி வெரி குட்

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Sunday, 04 March 2012 09:02 AM

    நல்ல ஒரு அருமையான சட்டம் வாழ்க புத்தளம் நகர சபை. இச்சட்டம் நாடு முழுதும் பரவினால் நன்றாக இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X