2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் 5000 ஆரம்ப பாடசாலைகள், 1000 இடைநிலை பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம். ஹிஜாஸ்)


'மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு 5000 ஆரம்ப பாடசாலைகள் மற்றும் 1000 இடைநிலை பாடசாலைகள் அபிவிருத்தி திட்டம் 2012' நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைவாக புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தின் 5 பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்களினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று மாம்புரி கத்தோலிக்க சிங்கள, தமிழ் மஹா வித்தியாலயத்தில் நடைப்பெற்றது.

மேற்படி திட்டத்தின் கீழ் கற்பிட்டி கோட்ட கல்வி காரியாலத்துக்குட்பட்ட மாம்புரி, றோமன் கத்தோலிக்க சிங்கள, தமிழ் ஆரம்ப பாடசாலை, நாவக்காடு, றோ.க. தமிழ் வித்தியாலயம், இலந்தையடி, சிங்கள வித்தியாலயம், பனையடி மற்றும் நரக்கள்ளி றோ.க பாடசாலைகள் ஆகியனவற்றுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், கற்;பிட்டி பிரதேச சபை தலைவர் எச்.எம். மின்ஹாஜ், கற்பிட்டி கல்வி கோட்ட பணிப்பாளர் நூஹூ லெப்பை உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X