Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ரீ. ஆகில் அஹமட்)
தண்ணீர் கலக்கப்பட்ட அறுநூறு போத்தல் மதுபானத்தை அநுராதபுரம் கல்குளம் பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளதாக வடமத்திய மாகாண மதுவரி திணைக்கள ஆணையாளர் காமினி அதிகாரி தெரிவித்தார்.
ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய மேற்படி சாராய போத்தல்களை பரிசோதித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் அவற்றில் தண்ணீர் கலக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
மதுபான போத்தல்களின் மூடிகள் கழற்றப்பட்டு மதுபானத்துடன் தண்ணீர் கலக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து மேற்படி மதுபானத்தை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் வடமத்திய மாகாண மதுவரி திணைக்கள ஆணையாளர் காமினி அதிகாரி தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த நாளை மறுதினம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
hamza Monday, 26 September 2011 10:04 PM
தண்ணிக்கே தண்ணியா?
Reply : 0 0
asker Tuesday, 27 September 2011 03:38 PM
இந்த ஹராமான வேலையை செய்தது யார்>?
Reply : 0 0
drs Wednesday, 28 September 2011 05:36 PM
அடப்பாவி ஏன் கைப்பற்றினீங்க? நல்லதா தானே செஞ்சாங்க. தண்ணி கூட, வெறி குறையுமே...!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
25 May 2025