2025 மே 23, வெள்ளிக்கிழமை

சிலாபத்தில் 706 குடும்பங்கள் இடம்பெயர்வு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ், ஜுட் சமந்த)


புத்தளம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, மாதம்பை மற்றும் நாத்தாண்டியா பிரதேச செயலாளர் பிரிவுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் 706 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களின்  பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தமக்கு எந்த அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என்றும்  புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

தெதுருஓயா நீர் மட்டம் அதிகரித்து வருவதால் தெதுருஓயாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கலாஓயா நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து  புத்தளம் மன்னார் வீதி போக்குவரத்து எழுவன்குளம் பகுதியில் தடைப்பட்டுள்ளது. ராஜாங்கன நீர்த்தேக்கத்தின்  வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X